உதயங்க வீரதுங்க கைது !
சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த ரஷ்யாவுக்கான இலங்கையின்
முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, டுபாயில் வைத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.நிதிக்குற்ற விசாரணைப் பிரிவின் மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி வைத்தியாலங்கார இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
நிதிக்குற்றப் விசாரணைப் பிரிவினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், விசாரணைகளை மேற்கொள்வதற்காகவே டுபாய் அதிகாரிகள் உதயங்க வீரதுங்கவை கைது செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, உதயங்க வீரதுங்கவை இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைப்பது தொடர்பாக, டுபாய் அதிகாரிகளுடன் நிதிக்குற்ற விசாரணை பிரிவு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
முன்னதாக அமெரிக்கா செல்ல முயன்ற போது டுபாய் அதிகாரிகளால் உதயங்க வீரதுங்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
மிக் விமான கொடுக்கல் வாங்களின்போது 7.833 மில்லியன் டொலர்களை மோசடி செய்ததாக உதயங்க வீரதுங்க மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதோடு, கடந்த 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் 20ஆம் திகதி அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
உதயங்க வீரதுங்க கைது !
Reviewed by nafees
on
23:43
Rating:
Reviewed by nafees
on
23:43
Rating:

No comments: