பேருவளை பிரதேச சபையில் முஸ்லிம் உப தலைவர் நியமிக்கும் முயற்சி தோல்வி ..



பேருவளை பிரதேச சபையில் முஸ்லிம் உறுப்பினர் தலைவராக நியமிக்கப்படுவதற்கான
முயற்சி தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பேருவளை பிரதேச சபையில் 18 உறுப்பினர்களை பொதுஜன பெரமுன வெற்றிகொண்ட நிலையில் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி பொதுஜன பெரமுனவுக்கு  ஆதரவு வழங்குவதாக அதன் அமைப்பாளர் அம்ஜத் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த இடையே இணக்கப்பாடு எட்டப்பட்ட நிலையில் இன்றைய சபை அமர்வில் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியால் முன்மொழியப்பட்ட முஸ்லிம் உறுப்பினர் தோல்வியடைந்துள்ளார்.

அவருக்கு எதிராக பொதுஜன பெரமுன உறுப்பினருக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் வாக்களித்த அதேவேளை பொதுஜன பெரமுனவின் 6 வேட்பாளர்கள் உபதலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி  முஸ்லிம் உறுப்பினருக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பாக முன்னிருத்தப்பட்ட ருஷ்திக்கு பொதுஜன பெரமுனவின்  14 உறுப்பினர்களும்  ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 03 உறுப்பினர்களும் மக்கள் காங்கிரஸின் 01 உறுப்பினரும் ஆதரவளிக்க 

பொதுஜன பெரமுனவால் முன்னிருத்தப்பட்ட நந்தன என்பவருக்கு ஆதரவாக  தே கட்சியின் 13 உறுப்பினர்களும் பொதுஜன பெரமுனவின் 6 உறுப்பினர்களும் சுதந்திர கட்சியின்  02 உறுப்பினர்களும் ராஜாலியா கட்சியின் 01 உறுப்பினரும் வாக்களித்துள்ளனர்.
பேருவளை பிரதேச சபையில் முஸ்லிம் உப தலைவர் நியமிக்கும் முயற்சி தோல்வி ..  பேருவளை பிரதேச சபையில் முஸ்லிம் உப தலைவர் நியமிக்கும் முயற்சி தோல்வி .. Reviewed by nafees on 02:57 Rating: 5

No comments:

Powered by Blogger.