நாட்டின் பொருளாதாரத்தில் தெளிவான வளர்ச்சி

கொழும்பில் இன்று நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றுகையிலேயே இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நாட்டின் நிதி உள்ளடகத்தை அதிகரிக்க மத்திய வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நிதி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டமை முக்கிய அம்சமாகும். கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவோருக்கு அதற்கான வசதிகளை வழங்குவது இலக்காகும். கடன் பெறுவதை இலகுவாக்குமாறு உரிய தரப்புக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
நுண்கடன் மற்றும் சிறிய நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வழங்கும் முறைமையை ஊக்குவிக்குமாறும் மத்திய வங்கி வலியுத்தியிருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி மேலும் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரத்தில் தெளிவான வளர்ச்சி
Reviewed by nafees
on
10:39
Rating:
No comments: