சர்வாதிகார பிரதமர் பதவி.... பிரதமருக்கு பைத்தியம் பிடித்தால் கூட பதவிவிலக்க முடியாத நிலை காணப் படும்.


சர்வாதிகார ஜனாதிப தியை நீக்குவதாக வாக்குறுதி வழங்கி ஆட் சியமைத்த நல்லாட்சி அரசாங்கத்தில் அதியுச்ச
சர்வாதிகார போக்கினைக் கொண்ட பிரதமரை உருவாக்கி விட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட் டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஒரு வேளை ஐக்கிய தேசியக் கட்சி தோற்கடித்தால் இப்போதுள்ள நிலைமையும் தாண்டி மோசமான வகையில் அதிகாரங்களை தக்கவைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படும். பிரதமருக்கு பைத்தியம் பிடித்தால் கூட பதவிவிலக்க முடியாத நிலை காணப் படும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செய் தியாளர் சந்திப்பு நேற்று கட்சி தலைமை அலு வலகத்தில் இடம்பெற்றது, இந் நிகழ்வில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.  அவர் மேலும் கூறுகையில்,  நிறைவேற்று ஜனாதிபதி முறைமை யினை நீக்கி ஜனநாயகத்தை உருவாக்க வந்த ஆட்சியில் நிறைவேற்று ஜனாதிப தியை விடவும் மோசமான பிரதமர் ஒரு வரை உருவாக்கிவிட்டோம்.

 இதில் ஜனாதி பதிக்கு எதிராக சில காரணிகளை உள்ள டக்கிகுற்றவியல் பிரேரணையை கொண்டு வந்து அவரை நீக்க முடியும். ஆனால் இப் போதுள்ள நிலையில் பிரதமர் இறந்தாலோ அல்லது கொல்லப்பட்டால் மட்டுமே பதவியில் இருந்து நீக்கப்பட முடியும், மாறாக பைத்தியம் பிடித்தால் கூட அவரை பதவியில் இருந்து நீக்க முடியாது என்ற நிலைமை உருவாகியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியினர், கூட்டு அரசாங்கத்தின் ஏனைய அங்கத்தவர்கள், சிவில் அமைப் பினர், கல்விமான்கள், மதத் தலைவர்கள் என அனைவருமே ஒரே நிலைப்பாட்டில் இருந்துகொண்டு பிரதமர் ரணில் விக் கிரமசிங்க பதவி விலக வேண்டும் என கூறிவருகின்ற நிலையில் அவை அனைத் தையும் நிராகரித்து தான் பிரதமர் நாற்கா லியை விட்டு விலகப்போவதில்லை என கூறி வருகின்றார். 

பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட் டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஒருவேளை ஐக்கிய தேசியக் கட்சி தோற் கடித்தால் இப்போது உள்ள நிலைமைக்கு அப்பால் மேலும் மோசமான வகையில் அதிகாரங்களை தக்கவைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படும். இனிமேல் பிரதமரை நீக்கவே முடியாது என்ற தீர்மானங்கள் கூட கொண்டுவரப்படலாம். சர்வாதிகார ஜனாதிபதியை நீக்குவோம் என்ற வாக் குறுதியை மக்களுக்கு வழங்கி ஆட்சி க்கு வந்து அதனை விட சர்வாதிகார போக்கை கொண்ட பிரதமர் ஒருவரை கொண்டுவந்துவிட்டோம் என அனைவர் மத்தியிலும் அதிருப்தி ஏற்பட்டுவிட்டது. ஆகவே இந்த நிலைமைகளை மாற்றியமைக்க வேண்டும் எனவும் அவர் குறிப் பிட்டார். 
சர்வாதிகார பிரதமர் பதவி.... பிரதமருக்கு பைத்தியம் பிடித்தால் கூட பதவிவிலக்க முடியாத நிலை காணப் படும். சர்வாதிகார பிரதமர் பதவி....  பிரதமருக்கு பைத்தியம் பிடித்தால் கூட பதவிவிலக்க முடியாத நிலை காணப் படும். Reviewed by nafees on 23:39 Rating: 5

No comments:

Powered by Blogger.