இலங்கை இராணுவத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படவிருந்த, பாரிய கிளைமேர் குண்டுத் தாக்குதல் முறியடிப்பு.


மாலியில், ஐ.நா அமைதிப்படையில் இடம்பெற்றுள்ள இலங்கை இராணுவத்தின் தொடரணியை
இலக்கு வைத்து மேற்கொள்ளப்படவிருந்த, பாரிய கிளைமேர் குண்டுத் தாக்குதலினை இலங்கை இராணுவத்தினர் முறியடித்துள்ளனர்.

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த, 200 இராணுவ வீரர்கள், மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.


இந்நிலையில், மாலியின் மொப்ரி நகர் நோக்கி பயணித்த இலங்கை இராணுவத்தினரை இலக்கு வைத்து 35 கிலோ கிராம் எடையுள்ள பாரிய கிளைமோர் குண்டு ஒன்று நிலத்தில்  பொருத்தப்பட்டுள்ளதை இலங்கை இராணுவத்தினர் கண்டுப்பிடித்து அதனை செயலிழக்கச் செய்துள்ளனர்.

மேற்படி குண்டினை வெடிக்க வைக்க காத்திருந்த நபர் ஒருவரையும் இலங்கை இராணுவத்தினர் கைது செய்து மாலி நாட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

http://www.itnnews.lk/local-news/sri-lanka-troops-defuse-claymore-mine-in-mali/
இலங்கை இராணுவத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படவிருந்த, பாரிய கிளைமேர் குண்டுத் தாக்குதல் முறியடிப்பு. இலங்கை இராணுவத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படவிருந்த, பாரிய கிளைமேர் குண்டுத் தாக்குதல் முறியடிப்பு. Reviewed by nafees on 23:16 Rating: 5

No comments:

Powered by Blogger.