கூரிய ஆயுதத்தால் தாக்கி மனைவியை கொன்றுவிட்டு நீர் குழியில் பாய்ந்த கணவன்,


தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட கணவர் தொடர்பான செய்தி அநுராதபுரம் - சாவஸ்திபுர பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

நேற்று இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மனைவியை இவ்வாறு கொலை செய்து விட்டு நீர் நிறைந்த கற்குழியொன்றில் பாய்ந்து கணவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவர்கள் இருவருக்கும் 5 மாதங்களான குழந்தையொன்றும் உள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறை முன்னெடுத்துள்ளது.
கூரிய ஆயுதத்தால் தாக்கி மனைவியை கொன்றுவிட்டு நீர் குழியில் பாய்ந்த கணவன், கூரிய ஆயுதத்தால் தாக்கி மனைவியை கொன்றுவிட்டு நீர் குழியில் பாய்ந்த கணவன், Reviewed by nafees on 07:25 Rating: 5

No comments:

Powered by Blogger.