ஐக்கிய தேசிய கட்சி வெற்றிபெற்ற நீர் கொழும்பு , காலி மாநகர சபைகளில் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் மேயர்களானார்கள் ..

பலமிருந்தும் UNP பலம் இழந்ததேன்?
இரு சபைகள் பொதுஜன பெரமுனவிடம் கை மாறியதேன்?
நீர்கொழும்பு மாநகர சபையின் புதிய மேயராக, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தயான் லன்சா வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த வாக்கெடுப்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தயான் லன்சாவுக்கு ஆதரவாக 25 வாக்குகளும் ஐக்கிய தேசிய கட்சியின் ரோஸி பெர்ணான்டோவுக்கு 19 வாக்குகளும் கிடைக்கப்பபெற்றுள்ளன.
நடைபெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் நீர்கொழும்பு மாநகர சபைக்கு ஐக்கிய தேசிய கட்சி சார்பாக 19 உறுப்பினர்களும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் 16 உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதே நேரம் காலி மாநகர சபையின் புதிய மேயராக, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரியந்த சகபந்து கொடகே இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த இரகசிய வாக்கெடுப்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரியந்த சகபந்துவுக்கு ஆதரவாக 20 வாக்குகளும் ஐக்கிய தேசிய கட்சியின் ஜிலித் நிஷாந்தவுக்கு 11 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
நடைபெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் காலி மாநகர சபைக்கு ஐக்கிய தேசிய கட்சி சார்பாக 14 உறுப்பினர்களும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் 13 உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேற்குறித்த இரு சபைகளும் ஐக்கிய தேசிய கட்சியிடமிருந்து பொதுஜனபெரமுனுவிற்கு கை மா(ற்)றியதன் மூலம் சிறிலங்கா சுதந்திர கட்சிக்கும் அதன் தலைமைக்கும் ஐக்கிய தேசிய கட்சி விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கையாகவே பார்க்க வேண்டி உள்ளது.
இதனை தொடர்ந்து நாட்டிலுள்ள பெரும்பாலான சபைகளை தாமரை பூக்கள் வெற்றிவாகை சூடக்கூடும் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஐக்கிய தேசிய கட்சி வெற்றிபெற்ற நீர் கொழும்பு , காலி மாநகர சபைகளில் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் மேயர்களானார்கள் ..
Reviewed by nafees
on
02:02
Rating:
No comments: