“ அல் கைதா அல் ஜிஹாத் “ புத்தகத்தில் எந்த ஒரு தவறான விடயமும் இல்லை ...

இலங்கையில் தனி முஸ்லிம் ராஜ்ஜியம் அமைக்கும் திட்டம் தொடர்பிலேயே எனது “ அல் ஜிஹாத் அல் கைதா “ என்ற நூலில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் பாடலி சம்பிக ரணவக தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறுகையில்,
அல் கைதா அல் ஜிஹாத் நூல் அல் கைதா என்ற பயங்கரவாத அமைப்பு உருவான விதம் தொடர்பில் தெளிவுபடுத்தும் புத்தகமாகும் .குறித்த புத்தகத்தில் இலங்கை உள்ள இஸ்லாமியர்கள் தொடர்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
அப்போதய காலப்பகுதியில் தென்கிழக்கு பல்கலைகழகத்தில் இலங்கையில் தனியான முஸ்லிம் ராஜ்ஜியம் ஒன்றை உறுவாக்க்குவதற்க்கான வேலைத்திட்டம் ஆரம்பமானது. அது தொடர்பிலே இந்த புத்தகம் எழுதப்பட்டது.இது தொடர்பில் கேள்வி எழுப்புபவர்கள் அல் கைதா அமைப்பை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் அல்லது இலங்கையில் தனி முஸ்லிம் ராஜ்ஜியம் அமைக்க திட்டமிட்டவர்களாக இருக்க வேண்டும்.
ஷாஸ்திரிய முறையில் அந்த புத்தகத்தில் எந்த தவறான தகவல்களும் உள்ளடக்கப்படவில்லை.இந்த புத்தகத்தை ஷாஸ்திரிய முறையில் எதிர்கொள்ள முடியாதவர்கள் இந்த புத்தகத்தை எதிர்க்கிறார்கள்.
“ அல் கைதா அல் ஜிஹாத் “ புத்தகத்தில் எந்த ஒரு தவறான விடயமும் இல்லை ...
Reviewed by nafees
on
07:54
Rating:
No comments: