இதைவிட கொடுமை எங்காவது நடக்குமா?

கண்டி திகனையில் உள்ள பள்ளிவாசலில் கடமையிலிருந்த மௌலவியையும்
முஅத்தினாரையும் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த பொலிசார் அடித்தது மட்டுமல்லாமல் அவர்களின் கையிலே பொல்லையும், கத்தியையும் கொடுத்து நாங்கள்தான் சிங்கள கடைகளை தாக்கினோம் என்று சொல்லச்சொன்னதாகவும், அதனை நாங்கள் வாங்கமறுத்தபோது கடுமையாக தாக்கினார்கள் என்றும் அந்த பள்ளிவாசலின் மௌலவியும், முஅத்தினாரும் பகிரங்கமாகவே முகநூல்வழியாக தெரிவித்து வருகின்றார்கள்.

அன்று கிந்தோட்டைக்கு சென்ற மு.காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களைநோக்கி இப்படி கேட்டிருந்தார்.இந்த கலவரத்தில் அரசபடைகளும் சம்பந்தபட்டதாக யாராவது அறிந்திருந்தால் தைரியமாக கூறுங்கள் என்றபோது அங்கே இருந்த ஒருவர் நான் கண்ணால்கண்டேன் என்று கூறியபோது அதனை பெரிதுபடுத்தாமல் மழுப்பி விட்டார் என்பதை உலகமே அறியும்.
இந்த நிலையில் கண்டி திகன பள்ளிவாசல் ஊழியர்களை அதிரடிப்படையினர் தாக்கிய வீடியோக்களும் வெளியாகியுள்ளது மட்டுமல்ல, அதில் பாதிக்கப்பட்டவர்கள் பகிரங்கமாகவே நடந்த விடயத்தை கூறுகின்ற அதே நேரத்தில், தங்களிடம் கத்தியையும், பொல்லுகளையும் தந்து நாங்கள்தான் சிங்கள மக்களின் கடைகளை தாக்கினோம் என்றும் பொய்யான விடயத்துக்கு எங்களைத்தூண்டினார்கள் என்றும் கூறுகின்றார்கள்.
இதைவிட கொடுமை எங்காவது நடக்குமா?
இதற்கு நமது அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
அல்லது இதனை பெருமனதுகொண்டு மன்னித்துவிடுங்கள் என்று கூறுவார்களா?
இந்த பொலிசாரின் நடவடிக்கைக்கு நாட்டின் ஜனாதிபதியோ பிரதமரோ பதில் சொல்வார்களா?
இதனைத்தான் நமது அரசியல்வாதிகள் கேட்பார்களா?
இந்த பிரச்சினை நடக்கும் போது சட்டம் ஒழுங்கு அமைச்சராக இருந்தவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள்தான் என்பதனால் அவர் இதற்கு பதிலளித்தேயாகவேண்டும் அல்லவா?
ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியின் பங்காளிகளாக இருக்கும் தலைவர்களான ஹக்கீம், ரிசாட் போன்றோர் இதற்கு நடவடிக்கை எடுக்காதுவிட்டால் முஸ்லிம் சமூகத்துக்காக போராடுவோம் என்று கூறி மக்களின் வாக்குகளைப்பெற்றது எதற்காக என்ற கேள்விக்கு பதி்ல் சொல்லவேண்டும் என்பதே எங்களின் கருத்தாகும்.
எம்.எச்.எம்.இப்றாஹிம்
கல்முனை.
இதைவிட கொடுமை எங்காவது நடக்குமா?
Reviewed by nafees
on
23:16
Rating:
No comments: