மஹசொஹொன் பலகாய உட்பட பௌத்த சிங்கள அமைப்புகள் இணைந்து சிங்களவர்களுக்கு புதிய அரசியல் கட்சி.

-ஏ.ஆர்.ஏ.பரீல்-
மஹசொஹொன் பலகாய உட்பட பௌத்த சிங்கள அமைப்புகள் சில ஒன்றிணைந்து
சிங்களவர்களுக் கென்று தனியான புதிய அரசியல் கட்சியொன்றினை ஆரம்பிக்கும் நடவடிக்கை களில் ஈடுபட்டுள்ளன.
சிங்ஹலே அமைப்பு, மஹ சொஹொன் பலகாய, சிங்கள தேசிய அமைப்பு மற்றும் சில சிங்கள அமைப்புகள் ஒன்றிணைந்து புதிதாக ஓர் அர சியல் கட்சியை பதிவு செய்து கொள்வதற்காக தேர்தல் ஆணையாளர் திணைக்களத் துக்கு விண்ணப்பம் செய்துள்ளன.
சிங்கள தேசிய அமைப்பின் பிரதானி டான் பிரியசாந்த் ஊடகங்களுக்கு இத்தகவலை வெளியிட்டார்.
புதிய அரசியல் கட்சி தொடர்பில் அவர் விளக்கம்ளிக்கையில்; நாட்டில் அனைத்து இனங்களுக்கும் அரசியல் கட்சிகள் உள்ளன.
என்றாலும் இலங்கையில் பெரும்பான்மையாக வாழும் சிங்களவர்களுக்கு தனியான அர சியல்கட்சி ஒன்று இல்லை, சில கட்சி களின் தலைவர்கள் பணத்துக்காக கட்சி மாறிக் கொண்டிருக்கிறார்கள்.
இதனால் சிங்களவர்களை ஒன்றிணைக்க மஹசொஹொன் பலகாய, சிங்ஹலே அமைப்பு மற்றும் சிங்கள தேசிய அமைப்பு என்பன ஒன்றிணைந்து புதிய அரசியல் கட்சியொன்றினை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. புதிய அரசியல் கட்சியின் பெயர் விரைவில் வெளியிடப்படும் என்றார்.
மஹசொஹொன் பலகாய உட்பட பௌத்த சிங்கள அமைப்புகள் இணைந்து சிங்களவர்களுக்கு புதிய அரசியல் கட்சி.
Reviewed by nafees
on
04:29
Rating:
Reviewed by nafees
on
04:29
Rating:
No comments: