துஷ்டனோடு உறவு... இறுதியில் இப்பிடியாச்சே. #இலங்கை

அடியாட்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்காத நபர் ஒருவரிடமிருந்து தங்க
ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
உறவினர் ஒருவரைத் தாக்குமாறும், தாக்குவதற்காக பணம் வழங்குவதாகவும் சில அடியாட்களுடன் வர்த்தகர் ஒருவர் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.
பாதுக்க பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் அடியாட்களுடன் இவ்வாறு உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.
குறித்த அடியாட்கள், வர்த்தகரின் அறிவுறுத்தலுக்கு அமைய அவரது உறவினரைத் தாக்கியுள்ளனர்.எனினும், தாக்குவதற்காக வழங்குவதாக இணங்கிய பணத் தொகையை வர்த்தகர் உரிய முறையில் அடியாட்களுக்கு வழங்கவில்லை.
இதனால் ஆத்திரமுற்ற அடியாட்கள் வர்த்தகரின் கடைக்குள் புகுந்து தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டுச் சென்ற வினோத சம்பவமொன்று பாதுக்க நகரில் இடம்பெற்றுள்ளது.
669,000 ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை நான்கு பேர் அடங்கிய கும்பல் கொள்ளையிட்டுச் சென்றதாக வர்த்தகர் பாதுக்க பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
சீ.சீ.ரி.வீ கமரா காட்சிகள் ஊடாக விசாரணை நடத்தி கொள்ளையிட்டவர்களை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த விசாரணைகளின் போது ஒப்பந்த பணம் வழங்காத காரணத்தினால் இவ்வாறு தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டமை தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பாதுக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
துஷ்டனோடு உறவு... இறுதியில் இப்பிடியாச்சே. #இலங்கை
Reviewed by nafees
on
20:50
Rating:
Reviewed by nafees
on
20:50
Rating:
No comments: