முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளபட்ட இனவாத வன்செயல் குறித்து துருக்கி கவலை !!



துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் துண்கா சுஹதார் நகரத்திட்டமிடல் மற்றும் நீர்
வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமை சந்தித்தார்.
 அமைச்சரின் இல்லத்தில் இன்று நடைபெற்ற இந்த சந்திப்பில் இருதரப்பு உறவுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

மேலும், அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளபட்ட இனவாத வன்செயல் குறித்து அவர் தனது கவலையை வெளியிட்டதுடன், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்திவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கையில் அபிவிருத்தி நடவடிக்கையில் துருக்கி முதலீடு மேற்கொள்வதற்கு ஆர்வம் செலுத்திவருவதை அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளபட்ட இனவாத வன்செயல் குறித்து துருக்கி கவலை !!  முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளபட்ட இனவாத வன்செயல் குறித்து துருக்கி கவலை !! Reviewed by nafees on 05:40 Rating: 5

No comments:

Powered by Blogger.