இளம் யுவதி வயல் வெளியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்.. காரணம் வெளியானது.


வெயாங்கொடை, தடகமுவ பிரதேசத்தில் வயலில் இருந்து கொலை செய்யப்பட்ட யுவதியின் சடலத்தை
பொலிஸார் மீட்டுள்ளனர்.

பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய வெயாங்கொடை பொலிஸார் இன்று முற்பகல் சடலத்தை மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக இளைஞர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சந்தேக நபர் யுவதியை வெட்டிக்கொலை செய்துள்ளார். திகலஹின்ன, எலமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான யுவதியே கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து தடகமுவ பிரதேசத்தை சேர்ந்த 25 வயதான இளைஞனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இளைஞனும், யுவதியும் பிரதேசத்தில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் தொழில் புரிந்து வந்துள்ளனர்.

காதல் விவகாரம் காரணமாக ஏற்பட்ட தகராறு முற்றியதில் இந்த கொலை நடந்துள்ளது என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை வெயாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இளம் யுவதி வயல் வெளியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்.. காரணம் வெளியானது. இளம் யுவதி வயல் வெளியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்.. காரணம் வெளியானது. Reviewed by nafees on 08:22 Rating: 5

No comments:

Powered by Blogger.