அம்பாறை மாவட்ட பொலிஸ் உபதேச குழுக்களின் ஓன்றுகூடல்.


ஆசிய நிலையம் மற்றும் கப்சோ நிறுவனங்களின் நிதி உதவியூடன் அதன் பணிப்பாளர்திரு A.J. காமில்
இம்டாட் அவர்களின் ஏற்பாட்டில் கடந்த 2018.03.25ம் திகதி அம்பாறை கிங்ஸ் ஜே ஹோட்டல்மண்டபத்தில் அம்பாறையில் இயங்கும் 17 பொலிஸ் நிலையங்களின் உபதேச குழு அங்கத்தவர்கள், மற்றும் அதன் நிலைய பொறுப்பாதிகாரிகள் கலந்து கொண்ட கருத்தரங்கு நடைபெற்றது.


இதன் போது அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர்திரு நுவன் வெதசிங்க, பொலிஸ் அத்தியட்சகர்திரு சமன்ந்த விஜயசேகர, ஆசிய நிலையத்தின் நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர்திரு. றொசான் சாஜஹான்இ கப்சோ நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் திரு I. அப்துல் ஜப்பார்மற்றும் பிரதேச பிரமுகர்கள் மதகுருமார்கள் கலந்து சிறப்பித்தார்கள்.


இதன் போது கருத்து தெரிவித்த பிரதி பொலிஸ்மா அதிபர்உபதேச குழுவின் ஆலோசனைகளும் வழிகாட்டல்களும், பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மிக தேவைப்பாடான ஒன்றெனவும் இதன் மூலமே பிரதேசத்தின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு முடியும் எனவூம் தெரிவித்தார். அத்தோடு பிரதேசத்தில் இயங்கும் உபதேச குழுக்களின் அங்கத்தவர்களின் கருத்துக்களையயும் கேட்டறிந்தார்.

இறுதியாக இந் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு சேவை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

அம்பாறை மாவட்ட பொலிஸ் உபதேச குழுக்களின் ஓன்றுகூடல். அம்பாறை மாவட்ட பொலிஸ் உபதேச குழுக்களின் ஓன்றுகூடல். Reviewed by nafees on 23:50 Rating: 5

No comments:

Powered by Blogger.