(வீடியோ) பெண்கள் முகத்தை மூடுதல் - நிலைபாடே இல்லாத உலமா சபை.



பெண்கள் முகத்தை மூடுதல் பற்றி முறையான எந்தவொரு ஆய்வு ரீதியான முடிவுகளும் இல்லாமல்
உலமா சபையின் முக்கிய உலமாக்களே மக்களை இப்படி குழப்பத்தில் ஆழ்த்துவது எப்படி முறையாகும்?
முகத்தை மூடுவது வாஜிப் - கட்டாயம் அதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களும் போராட வேண்டும் என்கிறார் ரிஸ்வி முப்தி.
உலமா சபையின் ஊடக பொறுப்பாளர் பாசில் பாருக் முகத்தை திறப்பதும் குற்றமில்லை அதுதான் உலமா சபையின் நிலைபாடு என்கிறார்.
முகத்தை மூடுவது கூடாது முகத்தையும் மணிக்கட்டு வரை கைகளையும் திறக்க வேண்டும் என்று உலமா சபை வெளியிட்ட நல்லிணக்க நூலில் (சிங்கள மக்களுக்காக) மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள் தெரன தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் உலமா சபை இதனை தெரிவித்து பின்னர் மறுத்தது.

இணையதளத்தில் முகத்தை மூடலாம் திறக்கலாம் இரண்டும் ஆகுமானது என்கிறார்கள்.

இதில் எது உண்மை? எது பொய்? எது சரி? எது தவறு? யார் சொல்வதை நம்புவது? யார் சொல்வது புறக்கணிப்பது?

முப்தி சொல்வது சரியா? பாசில் பாருக் சொல்வது சரியா? உலமா சபையின் இணையதளம் சொல்வது சரியா? அல்லது அவர்கள் வெளியிட்ட சிங்கள புத்தகம் சொல்வது சரியா?

நாலுக்கு நாள் ஓர் தீர்ப்பும், நேரத்திற்கும் இடத்திற்கும் ஏற்றது போல் தீர்ப்பும் கொடுப்பதற்கு பேர் பத்வாவா?

மக்களே முடிவெடுங்கள்.
அஸ்லம்  முகம்மத்  -
(வீடியோ) பெண்கள் முகத்தை மூடுதல் - நிலைபாடே இல்லாத உலமா சபை. (வீடியோ) பெண்கள் முகத்தை மூடுதல் - நிலைபாடே இல்லாத உலமா சபை. Reviewed by nafees on 21:12 Rating: 5

2 comments:

  1. Next kalavaram start.
    Oh makkale tayaraagungal SLTJ ku eziraha.
    Illa vittal naanum poi MAHASON BALAKAYA udan serndu kolven.

    ReplyDelete
  2. உருப்படியான எதனையும் செய்யாத இந்த உலக்க சபை (உலமா சபை) இதையாவது இஸ்லாத்தில் உள்ளதை மட்டும் (நல்லினக்க நூலில் குறிப்பிட்டது போன்று) சொன்னால் தேவலை! மீறி முகத்தை மூடுபவர்கள்,அவர்களின் தனிப்பட்ட விருப்பத்தில் செய்வதை தடுக்க முடியாது, அது அவர்களின் உரிமையில் சேரும்

    ReplyDelete

Powered by Blogger.