ஜே.வி.பி ஏன் கண்டி வன்முறையின் போது தமது இன காடையர்களை தடுத்து நிறுத்தவில்லை.?

ஜே வி பி என்பது நாடளாவிய ரீதியில் வாக்குப்பலம் இல்லாவிட்டாளும் இளைஞர் ஆதரவுப்பலம்
பெற்ற கட்சி. ஆனாலும் கண்டி சம்பவத்தின் போது இக்கட்சியின் ஆதரவு இளைஞர்கள் தமது இன காடையர்களை ஏன் தடுத்து நிறுத்தவில்லை.?
ஒரு சமூகத்தின் 500க்கும் அதிகமானவர்கள் இன்னொரு சமூகத்தை 5 நாட்களாக அடித்து நொறுக்கும் போது தமது சமூகத்திலிருந்து யார் இவற்றை செய்கிறார்கள் என்பது ஜே வி பி சிங்கள வாலிபர்கள் அறிந்திருக்கவில்லையா? இதை அவர்கள் அறியாமல் இருந்திருப்பார்களாயின் அவர்கள் பொதுச்சேவைக்கு கொஞ்சமும் அருகதையற்றவர்கள் என்பதே அர்த்தம்.
ஜே வி பி தலைமை கூட ஒரே நாளில் தலையிட்டு தமது சிங்களை இளைஞர் ஆதரவாளர்களை களத்தில் இறக்கி பயங்கரவாத செயலில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்த சொல்லவில்லை.
பல ஊர்களிலும் இருந்து திரண்டு வந்தே தாக்கினர் என்பதால் அந்த ஊர்களில் உள்ள ஜே வி பி ஆதரவு சிங்கள வாலிபர்கள் இதற்கான திட்டமிடுதலை நிச்சயம் அறிந்திருப்பர் அல்லது கேள்விப்பட்டிருப்பர். ஓரிருவர் ஒளித்திருந்து திட்டமிட்டால் அதனை அறிவது கஷ்டம். ஆனால் நூற்றுக்கணக்கானோர் சேர்ந்து திட்டமிடுவதை அதே சமூகத்தை சேர்ந்தோர் நிச்சயம் அறிவர்.
இவ்வாறு தாக்குதல்களை முறியடிக்க சந்தர்ப்பம் இருந்தும் வேண்டுமென்றே முஸ்லிம்கள் அழியட்டும் என ஜே வி பி பார்த்துக்கொண்டிருந்து விட்டு இப்போது இன ஐக்கியம் பேசிக்கொண்டு அரசியல் செய்ய வருவது கேவலமாகும்.
- முபாறக் அப்துல் மஜீத்
உலமா கட்சி
ஜே.வி.பி ஏன் கண்டி வன்முறையின் போது தமது இன காடையர்களை தடுத்து நிறுத்தவில்லை.?
Reviewed by nafees
on
21:45
Rating:
Reviewed by nafees
on
21:45
Rating:
No comments: