இளம் யுவதி வயல் வெளியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம். #உடலில் வெட்டுக் காயங்கள்.


வெயங்கொடை - வயல்வௌியொன்றில் இருந்து இளம்  யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.



குறித்த யுவதி யார் என்று இதுவரை அடையாளம் காணப்படவில்லை என காவற்துறை தெரிவித்துள்ளது.

பிரதேசத்தினை சேர்ந்த நபர் ஒருவர், யுவதி சடலமாக இருப்பதனை அறிந்து காவற்துறைக்கு தகவல் வழங்கியுள்ளதனை தொடர்ந்து சடலம் காவற்துறையால் மீட்கப்பட்டுள்ளது.

யுவதியின் சடலத்தில் வெட்டு காயங்கள் உள்ளதுடன், யுவதி கொலை செய்யப்பட்டு இவ்வாறு குறித்த பகுதியில் விட்டுச் செல்லப்பட்டிருக்க கூடும் என காவற்துறை சந்தேகித்துள்ளது.

குறித்த யுவதி மற்றும் ஓர் பிரதேசத்தில் இருந்து வெயங்கொடை பிரதேசத்திற்கு தொழிலுக்காக வந்துள்ளதாக முதல்கட்ட விசாரணைகளில் இருந்து அறியவந்துள்ளது.
இளம் யுவதி வயல் வெளியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம். #உடலில் வெட்டுக் காயங்கள். இளம் யுவதி வயல் வெளியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம். #உடலில் வெட்டுக் காயங்கள். Reviewed by nafees on 02:25 Rating: 5

No comments:

Powered by Blogger.