அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர்களாக கணவன் மனைவி சத்திய பிரமாணம்.
அக்கரைப்பற்று மாநகர சபைக்கு உறுப்பினர்களை தெரிவு செய்ய கடந்த பெப்ரவரி 10 ம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி
தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்தில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் 3329 வாக்குகளை பெற்று நான்கு நியமன உறுப்பினர்களை பெற்று கொண்டது
நான்கு உறுப்பினர்களில் மூன்று ஆண்களும் ஒரு பெண் உறுப்பினரும் தெரிவாகி இருந்தனர் இந்த நான்கு உறுப்பினர்களில் கணவன் மனைவியான ஏ.எம்.சுல்பிகார் மற்றும் எம்.எல் .கரிமுனிஷா ஆகியோர் இன்று ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைமையகமான தாரூஸலாமில் தலைவர் ரவூப் ஹக்கீம் முன்னிலையில் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர்களாக சத்திய பிரமாணம் செய்து உறுப்பினர்களாக நியமனம் பெற்றனர்
உறுப்பினர் ஏ.எம்.சுல்பிகார் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிவதுடன் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொருளாதார துறையில் விசேட பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது
அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர்களாக கணவன் மனைவி சத்திய பிரமாணம்.
Reviewed by nafees
on
08:59
Rating:
மாநகர கூட்டங்களில் வீட்டில் என்ன சாப்பாடு செய்யலாம் என்று பேசிக்குவாங்களோ?
ReplyDeleteஇனி கூட்டம் எல்லாம் படு ஜோர் தான் போங்கோ