அதி நவீன தொழினுட்பங்களை கொண்ட இயந்திரங்கள் எமது நாட்டுக்கு கிடைப்பது எமக்கான ஒரு வரம்.



இந்திய நாட்டிலிருந்து "ஆம்புயலன்ஸ்" வாகானங்களை கொண்டு வந்த பொழுது எதிர்ப்பு தெரிவித்த
வைத்திய சங்கம் இந்திய நாட்டின் மூலம் நடைமுறைப்படுத்தப்படவுள்ள சலவை இயந்திர வேளைத்திட்டத்துக்கு எதிராக குரலெழுப்புவது ஆச்சரியமான தொன்றல்ல.
ரூபா 700 மில்லியன் செலவில் நிர்மானிக்கப்படவுள்ள திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் அமைச்சர் உரை நிகழ்த்தும் போது 
" மேல் மாகாண வைத்தியசாலைகளுக்கான சலவை இயந்திரங்களை இந்திய நாட்டோடு சேர்ந்து செயற்படுத்துவதற்கான எதிர்ப்பினை வைத்திய சங்கம் தெரிவிக்கின்றனர். இந்த வேளைத்திட்டத்தை பொருப்பேற்கும் இந்திய நிறுவனம் 15 வருடங்களின் பின் மீண்டும் சுகாதார அமைச்சுக்கு வழங்கவிருக்கின்றனர். அதி நவீன தொழினுட்பங்களை கொண்ட இயந்திரங்கள் எமது நாட்டுக்கு கிடைப்பது எமக்கான ஒரு வரம்.
இந்தியாவின் மூலம் பெற்றுக் கொண்ட "ஆம்புயலன்ஸ்" வாகனங்களை பெற்றுக் கொள்ளும் போது வைத்தியர் சங்கம் பொது மக்களுக்கு இவ் வாகனங்களை கண்டால் கற்களால் எரியும் படியும், அவற்றை புரக்கணிக்கும் படியும் ஏவினர். அதிலே தாதிகளாக பணியாற்றுபவர்கள் அனுபவமற்றவர்கள் எனவும் மக்கள் மத்தியில் அச்சத்தை உண்டு பன்னினர்.

ஆனால் இன்று இந்த "ஆம்புயலன்ஸ்" வண்டிகள் மூலம் பலரும் பயன்பெற்று வருவதனை நாம் காண்கின்றோம். 

எதிர் காலத்தில் நாடு பூராகவும் இந்த "ஆம்புயலன்ஸ்" சேவையினை செயற்படுத்தவுள்ளோம்"  எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் முன்னால் பிரதம மந்திரி தி.மு ஜயரத்ன மற்றும் பிரதி அமைச்சர் அருராத ஜயரத்ன மாகாண சபை சுகாதார அமைச்சர் பந்துல யாலோஙம மற்றும் இன்னும் பல அரசியல் பிரமுகர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அதி நவீன தொழினுட்பங்களை கொண்ட இயந்திரங்கள் எமது நாட்டுக்கு கிடைப்பது எமக்கான ஒரு வரம்.  அதி நவீன தொழினுட்பங்களை கொண்ட இயந்திரங்கள் எமது நாட்டுக்கு கிடைப்பது எமக்கான ஒரு வரம். Reviewed by nafees on 03:49 Rating: 5

No comments:

Powered by Blogger.