(படங்கள்) முட்டாள்கள் தினத்தில் பிறந்தநாள் வாழ்த்து... இது நல்லா இருக்கே.

புகைப்பிடிப்பவர்களுக்கு வவுனியா மாவட்ட சுயாதீன தமிழ் இளைஞர் அமைப்பால் முட்டாள்கள் தினத்தில்
பிறந்தநாள் வாழ்த்து கூறி விழிப்புணர்வு பேரணி ஓன்று நடத்தப்பட்டுள்ளது.
சிந்தாமணி பிள்ளையார் ஆலய முன்றலில் ஆரம்பமாகிய இந்த பேரணி வவுனியா பழைய பேருந்து நிலையம், கடைவீதி, இலுப்பையடியூடாக புதிய பேருந்து நிலையத்தை சென்றைடைந்து பின்னர் குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தில் நிறைவடைந்தது.
இதன்போது இருசக்கர உழவு இயந்திரத்தில் பிறந்தநாள் கேக் வைக்கப்பட்டு, அதனை தொடர்ந்து இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பேரணியாக பின் தொடர்ந்து வந்தார்கள்.
இதன் போது மக்களுக்கு புகைத்தல் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.


(படங்கள்) முட்டாள்கள் தினத்தில் பிறந்தநாள் வாழ்த்து... இது நல்லா இருக்கே.
Reviewed by nafees
on
23:43
Rating:
Reviewed by nafees
on
23:43
Rating:
No comments: