இம்முறை மே 7 ஆம் திகதி மேதினம் கொண்டாடவும்.


உழைப்பாளர்களை கௌரவிக்கும் நோக்கில் உலகின் எல்லா நாடுகளிலும் மே மாதம் 1ம் திகதி மே தின
நிகழ்வுகள் நடைபெறுவது வழமையானது என்ற போதிலும் இலங்கையில் இம்முறை மே தின நிகழ்வுகளை மே மாதம் 7ம் திகதி நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பிலான அமைச்சரவை பத்திரம் நேற்றைய தினம் ஜனாதிபதியினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் தொடர்பில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தொழிற்சங்களுக்கும் அறிவிக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உலக தொழிலாளர் தினமும்இ வெசாக் பௌர்ணமி தினமும் அண்மித்த நாட்களில் அனுட்டிக்கப்படுவதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பௌத்த மறுமலர்ச்சிக்காக நடைபெறும் நிகழ்வுகளுக்கு மே தின நிகழ்வுகள் இடையூறாக அமைவதாகவும் இதனால் மே தின நிகழ்வுகளை ஒத்தி வைக்குமாறும் மூன்று பீடங்களினதும் மாநாயக்க தேரர்கள் தம்மிடமும் பிரதமரிடமும் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, மே 1ம் திகதி நடைபெறவுள்ள நிகழ்வுகளை ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

1960ம் ஆண்டு மே மாதம் 1ம் திகதி வெசாக் பௌர்ணமி தினம் அனுட்டிக்கப்பட்ட போது ஏற்பட்ட நிலைமைகள் நினைவிருக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, மே மாதம் 7ம் திகதி அரச பொது விடுமுறையாக அறிவிக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இம்முறை மே 7 ஆம் திகதி மேதினம் கொண்டாடவும். இம்முறை மே 7 ஆம் திகதி மேதினம் கொண்டாடவும். Reviewed by nafees on 21:17 Rating: 5

No comments:

Powered by Blogger.