வெனிசுலா பொலிஸ் நிலையத்தில் கலவரம் : 68 பேர் பலி



தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் பொலிஸ் நிலையத்தில் கைதிகளுக்கு இடையே
ஏற்பட்ட கலவரத்தில் 68 பேர் உயிரிழந்துள்ளதாகச் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

வெனிசுலாவில் உள்ள மத்திய நகரமான வெலன்சியாவில் உள்ள பொலிஸ் நிலையத்தில் கைதிகளுக்கு இடையே கலவரம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட இதில் 68 பேர் உயிரிழந்துள்ளதாக வெனிசுலா அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் நிலையத்துக்கு வெளியே குற்றவாளிகளின் உறவினர்கள் நீண்ட நேரமாகக் காத்திருந்தும் இந்தக் கலவரத்தில் பலியானவர்கள் குறித்த தகவல் ஏதும் அவர்களிடம் அளிக்கப்படவில்லை. இந்த உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என வெனிசுலா அரசு தெரிவித்துள்ளது.

வெனிசுலாவை பொறுத்தவரை அங்குள்ள சிறைச் சாலைகளில் அதிக கூட்டம் காரணமாக அவ்வப்போது இது போன்ற கலவரங்களால் உயிரிழப்புகள் ஏற்படுவது பொதுவான நிகழ்வாக பாரக்கப்பட்டுவருகிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமாசோனாஸ் மாகாணத்திலுள்ள பியூர்டோ அயாகுச்சோ சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 37 கைதிகள் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளைக் கடந்த 2013ஆம் ஆண்டு லாரா மாகாணம் யுரிபனா நகரில் உள்ள சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 60 கைதிகள் உயிரிழந்தும், 150 பேர் படுகாயமடைந்ததாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன
வெனிசுலா பொலிஸ் நிலையத்தில் கலவரம் : 68 பேர் பலி  வெனிசுலா பொலிஸ்  நிலையத்தில் கலவரம் : 68 பேர் பலி Reviewed by nafees on 04:15 Rating: 5

No comments:

Powered by Blogger.