பாதணிகளில் மறைத்து வைத்திருந்த 41 இலட்சம் ரூபா (சவுதி ரியால்)

41 இலட்சம் இலங்கை ரூபா பெறுமதியான சவுதி ரியால் நாணயத்தாள்களை பாதணிகளில் மறைத்து வைத்திருந்த, கட்டுநாயக்க விமான நிலையத்தின் வெளியேறும் முனைய பகுதியில் உள்ள சுங்க வரி தீர்வையற்ற வர்த்தக நிலையம் ஒன்றின் ஊழியரை சுங்க அதிகாரிகள் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.
நீர்கொழும்பு, குரண பிரதேசத்தை சேர்ந்த 30 வயதான நபரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வெளிநாட்டு நாணயத்தாள்களை மற்றுமொரு நபருக்கு வழங்கி அவர் மூலம் அவற்றை வெளிநாட்டிற்கு கடத்தி செல்வதற்காக இவர் நாணயத்தாள்களை தனது பாதணிக்குள் மறைத்து வைத்திருந்தாக சுங்க திணைக்களத்தின் பேச்சாளர் விபுல மினுவன்பிட்டிய தெரிவித்துள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்து 41 இலட்சம் ரூபா பெறுமதியான 500 மற்றும் 200 ரியால் நாணயத்தாள்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் குறித்து கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் விசாரணகைளை மேற்கொண்டு வருகின்றனர்.
பாதணிகளில் மறைத்து வைத்திருந்த 41 இலட்சம் ரூபா (சவுதி ரியால்)
Reviewed by nafees
on
01:31
Rating:
Reviewed by nafees
on
01:31
Rating:
No comments: