உபைத்துள்ளா சஹீர் (40) அடித்துக்கொலை.


திருகோணமலை, புல்மோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள கைவிடப்பட்ட கல்குவாரிக்கு செல்லும் பாதையில் காயங்களுடன் சடலம் ஒன்று பொதுமக்களின் தகவலை அடுத்து புல்மோட்டை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

புல்மோட்டை 2 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்தவர் 40 வயதுடைய உபைத்துள்ளா சஹீர் என்பவரே இவ்வாறு ஜனாஸாவாக  மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை புல்மோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தகராறு ஒன்றில்  இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்தனர்
உபைத்துள்ளா சஹீர் (40) அடித்துக்கொலை. உபைத்துள்ளா சஹீர்  (40) அடித்துக்கொலை. Reviewed by nafees on 08:24 Rating: 5

No comments:

Powered by Blogger.