ரனிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் ; 35 SLFP உறுப்பினர்கள் ஆதரவு !!



ரனில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரரணைக்கு ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 35
உறுப்பினர்கள் ஆதவளிப்பார்கள் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுதந்திர கட்சி செயலாளர் துமிந்த திசாநாயாக்க ரனிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா  பிரேரரணைக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ள நிலையில் சுதந்திர கட்சியின் பெரும்பாலானவர்கள் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

மேலும் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் அங்கம் வகிக்கும் மஹிந்த சமரசிங்க சரத் அமுனுகம விஜித் விஜேமுனி செய்சா உள்ளிட்ட சிலர் ஜனாதிபதியின் பதிலுக்கு காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே ஐம்பதுக்கும் மேற்பட்ட கூ எதிர்கட்சி உறுப்பினர்கள் ரனில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரரணைக்கு கையொப்பம் இட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


ரனிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் ; 35 SLFP உறுப்பினர்கள் ஆதரவு !!  ரனிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் ; 35 SLFP உறுப்பினர்கள் ஆதரவு !! Reviewed by nafees on 22:11 Rating: 5

No comments:

Powered by Blogger.