மார்ச் 31இன் பின்னர் சேதமடைந்த நாணயத்தாள்கள் செல்லுபடியற்றது – மத்தியவங்கி

சிதைக்கப்பட்ட மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர்
மாற்றிக் கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.அருகில் உள்ள வங்கிக் கிளைகளில் இவ்வாறான நாணயத்தாள்களை மாற்றிக்கொள்ளலாம். மேலும், இவ்வாறான நாணயத்தாள்களை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
நாணயத்தாள்களை வேண்டுமென்றே சேதப்படுத்தல் 1949 ஆம் ஆண்டு இலக்கம் 58 நிதி சட்டத்திற்கு அமைவாக தண்டப்பணம் அல்லது சிறைத்தண்டனை வழங்கக்கூடிய குற்றமாகும்.
மார்ச் 31இன் பின்னர் சேதமடைந்த நாணயத்தாள்கள் செல்லுபடியற்றது – மத்தியவங்கி
Reviewed by nafees
on
05:44
Rating:
No comments: