ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இன்று 30 பேர் கையொப்பம்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில்
இன்று (16) 30 பேர் கையொப்பமிட்டுள்ளதாக கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 14 குற்றச்சாட்டுக்கள் அடங்கியதாக கூட்டு எதிர்க் கட்சியினால் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பிரேரணைக்கு ஒப்பமிடும் நடவடிக்கை இன்று பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.
இப்பிரேரணை ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களினால் கொண்டுவரத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. பின்னர் அது வாபஸ் வாங்கப்பட்டது. பின்னர் கூட்டு எதிர்க் கட்சி கொண்டு வந்துள்ளது. இதற்கு ஐ.தே.க.யின் பலரும் ஆதரவு வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இன்று 30 பேர் கையொப்பம்.
Reviewed by nafees
on
11:19
Rating:
Reviewed by nafees
on
11:19
Rating:
No comments: