2 மில்லியன் பெறுமதியான வயாக்ரா மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகளுடன் ஐவர் கைது.

19 இலட்சம் ரூபாய் பெறுமதியான கருக்கலைப்பு மாத்திரைகள் மற்றும் பாலியல் உணர்வுகளைத்
தூண்டக் கூடிய மாத்திரைகளுடன் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வெலிகம பிரதேசத்தில் தொலைத் தொடர்பு சேவை மத்திய நிலையம் மற்றும் வீடொன்றில் மறைத்து வைத்திருந்த நிலையிலேயே இந்த மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மாத்தறை – மிரிஸ்ஸ கடல் பாதுகாப்பு பிரிவினர் வழங்கிய தகவலுக்கமைய, கம்புருகமுவ பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மாத்தறை மாவட்ட உணவு மற்றும் ஒளடதங்கள் அதிகாரசபையின் பரிசோதகர்கள் இணைந்து இந்த சுற்றிவளைப்பினை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில், சந்தேகநபர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய, 12,500 ரூபாய் பெறுமதியான கருக்கலைப்பு மாத்திரைகள் அடங்கிய அட்டை ஒன்று 20,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது
2 மில்லியன் பெறுமதியான வயாக்ரா மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகளுடன் ஐவர் கைது.
Reviewed by nafees
on
08:16
Rating:
Reviewed by nafees
on
08:16
Rating:
No comments: