2020 ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச போட்டியிட மாட்டார் !!



2020 ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச போட்டியிட மாட்டார் என அக்கட்சி
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

2020 ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்‌ஷ களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக ரனில் விக்ரமசிங்கவே களமிறங்குவார் என கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 24 வருடங்களாக ரனில் விக்ரமசிங்க கட்சி தலைவராக இருப்பதால் சஜித் பிரேமதாசவுக்கு ஐக்கிய தேசிய கட்சி  கட்டமைப்பில் போதுமான பலம் இல்லாமல் இருப்பதால் அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்வர அச்சப்படுவதாகவும் 2025 இல் ஜனாதிபதி தேர்தலில் அவர் சகல ஆயத்தங்களுடன் களமிறங்குவார் எனவும் கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானத்தில் பயணம் செய்ய அச்சம் காரணமாக  வெளிநாட்டு  பயணங்களைகூட வெகுவாக தவிர்ந்து வரும் சஜித் பிரேமதாச சவால்களை எதிர்கொள்ள அச்சப்படுவது சாதாரண விடயம் என கட்சி முக்கியஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.

2020 ஜனாதிபதி தேர்தலில் மொத்த வாக்காளர்களில் 71%  பௌத்த சிங்கள வாக்காளர்கள் என்பதாலும் கடந்த தேர்தலில் நல்லாட்சி வாக்கு வேட்டையில் கணிசமான பங்களிப்பு செய்த புரவெசி பலய தூஷன விரோதி ஹண்ட போன்ற அமைப்புகள் மக்கள் மத்தியில் தொய்வை சந்தித்துள்ள நிலையிலும் கோத்தாபய   ராஜபக்‌ஷவுக்கான வெற்றி வாய்ப்பே   அதிகமாக காணப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறனர்.

2020 ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச போட்டியிட மாட்டார் !! 2020 ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச போட்டியிட மாட்டார் !! Reviewed by nafees on 07:09 Rating: 5

No comments:

Powered by Blogger.