பரீட்சையின் போது மாணவர்களுக்கு வினாத்தாளை வாசிக்க 15நிமிடங்கள் வழங்கப்படும். பல புதிய யுக்திகளை அறிமுகப்படுத்தியது பரீட்சைகள் திணைக்களம்.

இனிமேல் மாணவர்கள் பொதுப்பரீட்சைகளுக்கு தோற்றும்போது பரீட்சை எழுதமுன் வினாத்தாளை
வாசிக்க 15நிமிடங்கள் வழங்கப்படும். அதாவது வாசிக்கும் நேரம் ஒதுக்கப்படும். அதன்பிறகே பரீட்சை எழுத அனுமதிக்கப்படுவர் என்று இலங்கைப்பரீட்சைகள் திணைக்கள உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.
மேலும் பல புதிய யுக்திகளை மாற்றங்களை பரீட்சைகள் திணைக்களம் இவ்வாண்டிலிருந்து முன்னெடுக்கவுள்ளது.
2001ஆம் ஆண்டிற்குப்பின்னரான பொதுப்பரீட்சைப் பெறுபேறுகளை உறுதிப்படுத்த வலயக்கல்விப்பணிப்பாளர்களுக்கு வசதி ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டிலிருந்து தரம்12ற்கான பொது தகவல்தொழில்நுட்ப பரீட்சை ஒன்லைனில் நடத்தப்படவுள்ளது. பகுதி 1 பல்தேர்வு வினாக்கள் பகுதி2 பிரயோகப்பயிற்சி.
பொதுப்பரீட்சை நடைபெறும் மண்டபங்களுக்கு மேற்பார்வையாளர் மற்றும் நோக்குனர்களுக்கு மேலதிகமாக மேலதிக மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அவர்கள் நோக்குனர்களை மேற்பார்வை செய்வார்கள்.
ஆகஸ்ட் புலமைப் பரீட்சை முற்பகுதியில் நடத்தப்படவுள்ளது. அதேபோல க.பொத. சாதாரணதரப் பரீட்சை டிசம்பர் முதல்வாரத்திலே ஆரம்பிப்பதுடன் அந்த மாதத்திலேயே மதிப்பீட்டையும் நடத்திமுடிக்க ஏற்பாடு செய்யப்படும்.
இனிமேல் க.பொ.த. சா.த மற்றும் உயர்தர சான்றிதழ்களின் பிரதிகளைப்பெறவிரும்பினால் ஒன்லைனில் விண்ணப்பிக்கமுடியும். அதற்கான கட்டணத்தை அருகிலுள்ள வங்கியில் செலுத்தி அதன் இலக்கத்தை ஒன்லைனில் அறிவித்தால் பிரதிகளை கையில் கிடைக்குமாறு அல்லது கூரியர் தபாலில் அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தரம் 6- – 9 வரை ஒதுக்கப்படாத பாடவேளை என்று ஒன்றிருந்து வந்துள்ளது. இனிமேல் அப்பாடவேளைக்கு தகவல் தொழில்நுட்ப சான்றிதழ் பாடத்தினை இடுமாறு கேட்கப்பட்டுள்ளது. அப்பாடத்திற்கு கல்வியியல்கல்லூரி பயிற்சிமுடித்தவர்களை நியமிக்க வேண்டும்.
பரீட்சையின் போது மாணவர்களுக்கு வினாத்தாளை வாசிக்க 15நிமிடங்கள் வழங்கப்படும். பல புதிய யுக்திகளை அறிமுகப்படுத்தியது பரீட்சைகள் திணைக்களம்.
Reviewed by nafees
on
01:39
Rating:
Reviewed by nafees
on
01:39
Rating:
No comments: