1400 மில்லியன் செலவில் அபிவிருத்தி செய்யப்பட்ட மட்டக்களப்பு விமான நிலையம் நாளைமுதல் பொதுமக்கள் பாவனைக்கு...


விமானப்படையின் கட்டுப்பாட்டில் கடந்த 25 ஆண்டுகளாக இருந்த மட்டக்களப்பு விமான நிலையம் மட்டக்களப்பு விமான நிலையம், சிவில் விமானப் போக்குவரத்துக்காக நாளை திறந்து விடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விமானப்படையின் கட்டுப்பாட்டில் இருந்த குறித்த விமான நிலையம் 2016ஆம் ஆண்டு மே31ஆம் திகதி சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையால் பொறுப்பேற்கப்பட்டது.

இந்த விமான நிலையம்  1400 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.

46 மீற்றர் அகலமும், 1066 மீற்றர் நீளமும் கொண்டதாக இந்த விமான நிலையத்தின் ஓடுபாதை விரிவாக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் போக்குவரத்துக்காக திறந்து விடப்படவுள்ள மட்டக்களப்பு விமான நிலையத்தில் இருந்து இரத்மலானை விமான நிலையத்துக்கு, உள்ளூர் விமான சேவைகளை ஆரம்பிக்க பல்வேறு விமான சேவை நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1400 மில்லியன் செலவில் அபிவிருத்தி செய்யப்பட்ட மட்டக்களப்பு விமான நிலையம் நாளைமுதல் பொதுமக்கள் பாவனைக்கு... 1400 மில்லியன் செலவில் அபிவிருத்தி செய்யப்பட்ட மட்டக்களப்பு விமான நிலையம் நாளைமுதல் பொதுமக்கள் பாவனைக்கு... Reviewed by nafees on 23:42 Rating: 5

No comments:

Powered by Blogger.