100 வருடங்களை பூர்த்தி செய்த பாத்திமா முஸ்லீம் மகளிர் கல்லூரி.. பிரதம அதிதியாக ஜனாதிபதி.


(அஷ்ரப். ஏ. சமத்)
கொழும்பு மத்திய தொகுதியில் முஸ்லீம் மாணவிகளுக்கு 3 மொழிகளிலும் கல்வி போதிக்கும் ஒரு பாடசாலையாக
கொழும்பு பாத்திமா முஸ்லீம் மகளிர் கல்லூரி இயங்கி வருகின்றது.

இக் கல்லுாாியில் தற்பொழுது 2537 மாணவிகளும்  115க்கும் மேற்பட்ட ஆசிரியைகளும் கல்வி போதிக்கின்றனா் இக் கல்லுாாி 1918ல்  50 மாணவிகளுடன் ஆரம்பிக்கப்பட்டு 2018ல் மாா்சில் 100 வருடங்களை பூர்த்தி செய்துள்ளது. இக் கல்லுாியின் அதிபராக  சிஹானா அஸ்லம் தற்பொழுது அதிபராக கடமையாற்றி வருகின்றது.

நுாற்றாண்டு விழா, பரிசலிப்பு வைபவங்கள் நேற்று கொழும்பு தாமரை தடாக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது. பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா,கலந்து கொண்டு மாணவிகளுக்க விருதுகளை வழங்கி வைத்தாா். அத்துடன்   அமைச்சா் பைசா் முஸ்தபா, ஏ.எச்.எம். பௌசி, பாராளுமன்ற உறுப்பிணா்கள் முஜிபு ரஹ்மான், எஸ்.எம் மரைக்காா், மற்றும் மாகாண சபை உறுப்பிணா்கள் மொஹமட் பாயிஸ், அர்சத் நிசம்டீன். பிரதிமேயா் முஹமட் இக்பால் , கொழும்பு மாநகர சபை உறுப்பிணா் அசாத் சாலி,  உடப்ட பழைய மாணவிகள்  ஆசிரியைகளும்  பெற்றாா்களும் கலந்து சிறப்பித்தனா்.
100 வருடங்களை பூர்த்தி செய்த பாத்திமா முஸ்லீம் மகளிர் கல்லூரி.. பிரதம அதிதியாக ஜனாதிபதி.  100 வருடங்களை பூர்த்தி செய்த பாத்திமா முஸ்லீம் மகளிர் கல்லூரி.. பிரதம அதிதியாக ஜனாதிபதி. Reviewed by nafees on 02:38 Rating: 5

1 comment:

Powered by Blogger.